Advertisment

தனியார் செய்தித் தொலைக்காட்சி முடக்கம்-குவிந்த கண்டங்கள்

a5438

Private news television freezes - convex continents Photograph: (news media)

தனியார் செய்தித் தொலைக்காட்சியான 'புதிய தலைமுறை' அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள கண்டன பதிவில் 'அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் வழங்கும் நிறுவனங்கள்  மூலம் செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்று அடைகின்றன.

Advertisment

தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிவிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்கு முறையாகும் 'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவின் இணையமைச்சர் எல்.முருகன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.விஜயகுமார், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

govenment cable tv project television press media news
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe