புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் காமராஜர் நகர் தெருவைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (32), கார்த்திக் (27) ஆகிய இருவரும் கடந்த ஜூலை இறுதி வாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த அவர்களின் உறவினரான கூழ் காளிதாஸ், கல்லல் அருவா குமார் (எ) கருப்பூர் முத்துக்குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான கபடி வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருச்சி துறையூர் சிக்கந்தபூர் பகுதியைச் சேர்ந்த கபடி வீரரான ஆனஸ்ட்ராஜ் (28) சம்பவம் நடப்பதற்கு முன்பும், சம்பவம் நடந்த பிறகும் சில நாட்கள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைத்திருந்ததாக 13 வது நபராக கடந்த ஆகஸ்ட் 8 ந் தேதி கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில் தான் தனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள தகவல் கிடைத்தும் அவரைப் போய் பார்க்க முடியவில்லை என்ற ஆனஸ்ட்ராஜ் விரக்த்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 7 ந் தேதி நள்ளிரவில் சிறை காவல்கள் சிறை அறைகளை ஆய்வு செய்த போது, ஆனஸ்ட்ராஜ் சிறை அறை ஜன்னல் கம்பியில் தனது உடையில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கும் நகர காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து ஆனஸ்ட்ராஜ் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை எஸ்.பி ருக்குமணி பிரியத்தர்சிணி ஆய்வு செய்து விசாரனை செய்தார். மேலும் புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரனை செய்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் சமீபகாலமாக தற்கொலை முயற்சிகள் செய்வது அதிகரித்து வருகிறது.

கடந்த 2 ந் தேதி தஞ்சை ஆலங்குடி அரசுப் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்வத்தில் கைது செய்யப்பட்டுள்ள அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்வங்களை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். 

Advertisment