Advertisment

விசாரணைக் கைதி ஆகாஷ் வழக்கு : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்!

akash-cbcid

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதாவது இந்த சம்பவத்தில் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இந்த சி.சி.டி.வி. காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக ஆகாஷை கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதற்காக பாலத்தில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதே சமயம் கைது செய்ய முயன்ற போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகக் கூறி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஆகாஷ் உயிரிழந்ததாக காவலர்கள் கூறிய நிலையில் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

akash-father-kannan
ஆகாஷ்- அவரது தந்தை கண்ணன்

அதோடு மதுரை - ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆகாஷின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அமைச்சர் பெரிய கருப்பன்,  காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்ந பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ஆகாஷ் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

CBCID CBCID INVESTIGATION sivagangai manamadurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe