தருமபுரி மாவட்டம், மாவேரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கலைவாணி என்பவர் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தலைமையாசிரியர் கலைவாணி மாணவர்களை தனது கைகால்களை அமுக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாணவர்கள் அவருக்கு கைகால்களை அமுக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதன் விளைவாக, தலைமையாசிரியர் கலைவாணி பணிநீக்கம் செய்யப்பட்டார்.