தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது கூட்டணியைப் பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அன்புமணி பா.ம.க, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

Advertisment

இதனிடையே இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக அந்த கூட்டணித் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கூறி வந்தனர். மேலும் தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என்று கூட்டணித் தலைவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளனர். இது அதிமுக - பா.ஜ.க தலைவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

Advertisment

இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட மாநாடு நாளை (01-03-26) மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்துடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, நளை காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்லவிருக்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சுமார் 2700 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நாட்டுக்கும் அந்த  திட்டங்களை அர்ப்பணிக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து நாளை மதியம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி  ரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து  கொண்டு உரையாற்ற இருக்கிறார். தொடர்ந்து நாளை இரவு 6 மணி அளவில  மதுரையிலிருந்து புறப்பட்டு டெல்லி இரவு 9  மணி அளவில் டெல்லி செல்கிறார். 

Advertisment