தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து பங்கேற்க உள்ளார்.

Advertisment

பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏற்கெனவே அன்புமணி தரப்பு பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி இன்று 2 மணியளவில் தமிழகம் வருகை தரவுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2:50 மணிக்கு மதுராந்தகம் செல்கிறார். மதுராந்தகத்தில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 4:15 மணியளவில் பொதுக்கூட்டம் நிறைவடைந்த பிறகு சாலை மார்க்கமாக மதுராந்தகம் செல்கிறார். அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரமாக போடப்பட்டுள்ளது. மதுராங்கத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் இவ்விழாவில் தொண்டர்கள் அமர்வதற்கு 1.20 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழா மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மேடையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட்ட சின்னமான குக்கர் சின்னம், பா.ம.க சின்னமான மாம்பழம் சின்னம் உள்ளிட்ட சின்னம் இடம்பெற்றுள்ளது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

Advertisment