மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் இன்று (02-10-25) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை கொண்டாடும் விதமாக டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காந்தி ஜெயந்தி என்பது மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த அன்பான அவரின் அசாதாரண வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்துவதாகும். துணிச்சலும் எளிமையும் எவ்வாறு பெரிய மாற்றத்திற்கான கருவிகளாக மாறும் என்பதை அவர் நிரூபித்தார். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் இரக்கத்தின் சக்தியை அவர் நம்பினார். ஒரு வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேடலில் அவரது பாதையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை போல், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.