Advertisment

மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை!

modi-rs-l-murugan

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தொடர்ந்து அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு குறித்தும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தன. அதே நேரத்தில், இந்த விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படாத காரணத்தினாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

Advertisment

இந்த நிலையில், நேற்று (04.02.2026) மாலை 5 மணியளவில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்ற இருந்தார். ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியில் காரணமாக மோடி உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி திரளாகச் சென்றனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் அவையில் பதற்றமான சூழல் நிலவியது.  

Advertisment

இந்த சம்பவம் குறித்து பாஜக "இது வரலாற்றில் முன் எப்போது இல்லாத நிகழ்ந்துள்ள வருந்தத்தக்க ஒரு சம்பவம் ஆகும். எதிர்க்கட்சிகள் ஜனநாயக நெறிமுறைகளைச் சீர்குலைக்கின்றன" போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன.  இதற்குப் பதிலளிக்கும் விதமாக " தீர்க்கப்படாத தேசிய பிரச்சனைகளின் மீதான கவனத்தை ஈர்க்கவே, இந்த போராட்டம் நடைபெற்றது" என எதிர்க்கட்சிகள் விளக்கமளித்துள்ளன.  இதற்கிடையே மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

modi-speech-central-vista-entrance

இருப்பினும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று (05.02.2026) மாலை 5 மணியளவில் உரையாற்ற உள்ளார். எனவே, "மாநிலங்களவையில் பிரதமரின் உரை நிச்சயம் கவனிக்கப்படும் என்றும், அது பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு ஒரு திசையை நிர்ணயிக்கும் விதமாக அமையும்" என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

Parliament budget session Rajya Sabha Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe