தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு நேற்று வந்தார். அதனை தொடர்ந்து இன்று மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Advertisment

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி முழுக்க முழுக்க ஹிந்தியை தவிர்த்து ஆங்கிலத்திலேயே பேசினார். வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மத்திய அரசு விழாக்கள் மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் ஹிந்தியில் பேசுவது அவரது வழக்கம். ஆனால், இன்றைய மதுரை என்.டி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தியை தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாற்றியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது உரையை நோட் செய்யும் உளவுத்துறையினர் கூட, அவர் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியதை ஆச்சர்யமாகப் பார்த்தனர். அரசு அதிகாரிகள் மத்தியில் இது பேசு பொருளானது. 

Advertisment