Advertisment

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

isral-modi

பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் அரசமுறை பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாஹு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தார். அதன் பின்னர், இஸ்​ரேல் நாடாளு​மன்றமான ‘நெசட்​டில்’ பிரதமர் மோடி சிறப்புரை​யாற்​றி​னார். அதில், "பயங்கரவாதத்தால் ஏற்படும் மக்களின் உயிர்ப் பலியை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அந்த வகையில், கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இந்தியப் மக்களின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

Advertisment

இந்தியாவும் நெடுங்காலமாகப் பயங்கரவாதத்தின் வலியைத் தாங்கி நிற்கிறது. குறிப்பாக, மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எங்கள் நினைவில் அழியாத வடுவாக மாறியுள்ளது. இஸ்ரேலைப் போலவே இந்தியாவும் பயங்கரவாதத்தை ஒரு போதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரையில் இந்தியச் சமரசமற்ற கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. அந்த வகையில் நீடித்த அமைதியைக் கொண்டுவரப் பிராந்திய நாடுகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாலஸ்​தீன பிரச்​சினைக்​குத் தீர்வு காண வேண்​டிய நேரம் வந்​துள்​ளது. அமை​திக்​கான பேச்​சு​வார்த்​தையைத் தொடங்க வேண்​டும் என இந்​தியா வலியுறுத்​துகிறது" என்று தெரிவித்தார். 

Advertisment

முன்னதாக, இந்தியாவைப் பற்றிப் பேசிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு, ‘‘இஸ்ரேலின் சிறந்த நட்பு நாடு இந்​தி​யா. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் சகோதர நாடு​கள். இந்திய பிரதமர் மோடி நமது நாட்டிற்கு வருகை தந்துள்ளது, நமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இந்தியா மற்றும் இஸ்ரேலின் நட்புறவு பலப்படுத்தப்படுகிறது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இருநாட்டுப் பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதில், இந்தியாவின் வான் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்ஸன சக்கரம்’ ஆயுத தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கருவியான அயர்ன்டோம் ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பகிர்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அர்​ஜென்​டினா அதிபர் ஜாவீர் மிலே உட்படச் சிலர் மட்​டுமே உரை நிகழ்த்​தி​யுள்​ளனர். இந்த நிலையில், இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் உரை​யாற்​றிய முதல் இந்​திய பிரதமர்​ மோடி என்​பதும்​ குறிப்​பிடத்​தக்கது.

Parliament Benjamin Netanyahu Narendra Modi israel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe