Advertisment

“தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” - பிரதமர் மோடி

narendramodii

Prime Minister Modi says Time has come to say goodbye to the corrupt DMK government

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து பங்கேற்க உள்ளார்.

Advertisment

பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகள் பங்குபெறவுள்ளன. அந்த வகையில் அதிமுக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தரப்பு பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்குபெறவுள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, இன்று 2 மணியளவில் தமிழகம் வருகை தரவுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2:50 மணிக்கு மதுராந்தகம் செல்கிறார்.

Advertisment

இதையடுத்து மதுராந்தகத்தில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று பிற்பகல் 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரமாக போடப்பட்டுள்ளது.  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் இவ்விழாவில் தொண்டர்கள் அமர்வதற்கு 1.20 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இவ்விழா மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

nda alliance Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe