Advertisment

கிறிஸ்துமஸ் வழிபாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி!

புதுப்பிக்கப்பட்டது
modich

Prime Minister Modi participated in Christmas worship

கடவுள் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்கும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் இன்று (25-12-25) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையோட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் காலை சிறப்பு வழிபாட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று வழிபாடு செய்தார். அதன் பிறகு அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் கலந்து கொண்டேன். இந்த ஆராதனை அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

christmas Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe