பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (07.02.2026) மலேசியா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்டின் போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எனது நண்பரும், மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று, இன்று நான் மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறேன். இந்தியா மற்றும் மலேசியா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராகிம் உடனான எனது கலந்துரையாடல்களையும், நமது விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் மேம்படுத்துவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது பாதுகாப்பு மற்றும் இறையாண்மை உறவுகளை ஆழப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கூட்டாண்மையை மேம்படுத்தவும், புதிய துறைகளில் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் இலக்கு வைப்போம்.
மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்தினரைச் சந்திக்கவும் நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். சுமார் முப்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அவர்கள், உலகில் உள்ள மிகப்பெரிய இந்தியப் புலம்பெயர்ந்தோரில் ஒருவராகத் திகழ்கின்றனர். மலேசியாவின் முன்னேற்றத்திற்கு அவர்களின் மகத்தான பங்களிப்பும், நமது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வாழும் பாலமாக அவர்கள் ஆற்றும் பணியும் நமது வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவிற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/modi-flight-vanakkam-2026-02-07-10-44-58.jpg)