தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட மாநாடு இன்று (01-03-26) மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்துடைந்தார். அவரை ஆளுநர் ஆர்.என். ரவி, இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, அவர் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி சென்றார். அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சுமார் 2700 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நாட்டுக்கும் அந்த  திட்டங்களை அர்ப்பணித்தார். அதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரைக்கு வருகை தந்தார்.

Advertisment

இந்த நிலையில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் வருகையையொட்டி கோயில் மற்றும் மலைப் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.