ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பிரதமர் மோடி மிக நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் எங்களுடன் வர்த்தகம் செய்கிறார்கள். மேலும் நாங்கள் அவர்கள் மீது மிக விரைவில் வரிகளை உயர்த்த முடியும்” என்று கூறியிருந்தார். இந்த கருத்து, இந்தியா ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது, அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வர்த்தகத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் எண்ணெய் வாங்க வேண்டும் எனவும், மறுத்தால் இந்தியா மீது வரிகளை உயர்த்துவோம் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா இந்தியா மீது வரிகளை உயர்த்துவது குறித்து காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் நீட்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சவான், “வெனிசுலா அதிபரைப்போல, பிரதமர் மோடியும் கடத்தப்படுவாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கருத்து தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், “இந்தியா அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்து 5 ஆண்டுகளாகியும் அவற்றை இன்னும் வாங்கவில்லை. இது தொடர்பாக ஐயா, தயவுசெய்து, நான் உங்களைச் சந்திக்கலாமா? என்று மோடி என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியத் தலைவருடன் தனக்கு ஒரு வலுவான நல்லுறவு இருக்கிறது. மேலும், இந்தியாவின் நிலுவையில் உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள், குறிப்பாக நீண்ட காலமாக தாமதமாகி வரும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் விநியோகம் தொடர்பாக பேசுவதற்காக மோடி தன்னை தொடர்பு கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார். தற்போது நிலவும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் மோடி தன்னை சந்திக்க இருப்பதாக ட்ரம்ப் கூறியிருப்பது, சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/trump-modi-2026-01-07-17-08-44.jpg)