நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு மாளிகையில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டனியோ கோஸ்டோ மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் பங்கேற்றனர். அவரையும் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

Advertisment

அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஆகியவை நடைபெற்றன.

இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் போர் நினைவிடத்திற்குச் சென்று சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். 

Advertisment