இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், “இந்திய மக்களாகிய நாம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், குடியரசு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடப் போகிறோம். இந்த தேசிய விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு தினத்தின் உன்னதமான தருணம், நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் அதன் நிலை மற்றும் திசையைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்று, நமது சுதந்திர இயக்கத்தின் வலிமை, நாட்டின் நிலையை மாற்றியது. நமது சொந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் சிற்பிகளாக நாம் மாறினோம்.
ஜனவரி 26, 1950 முதல், நமது அரசியலமைப்பு லட்சியங்களை நோக்கி நமது குடியரசை நகர்த்தி வருகிறோம். அன்று, நமது அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தின் பிறப்பிடமான பாரதம், ஆதிக்க அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நமது ஜனநாயகக் குடியரசு உதயமானது. உலக வரலாற்றின் மிகப்பெரிய குடியரசின் அடிநாதமான ஆவணமாக நமது அரசியலமைப்பு விளங்குகிறது. நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் லட்சியங்கள், நமது குடியரசை வரையறுக்கின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசியலமைப்பு விதிகள் மூலம் தேசியவாத உணர்வுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கினர்” எனத் தெரிவித்தார்
தொடர்ந்து பேசியவர், “கடந்த ஆண்டு, நமது நாடு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பல பயங்கரவாதிகள் தங்கள் அழிவை சந்தித்தனர். பாதுகாப்புத் துறையில் நமது தன்னிறைவே ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றிக்கு உந்துதலாக அமைந்தது. சியாச்சின் முகாமில், மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டைப் பாதுகாக்க நமது துணிச்சலான வீரர்கள் முழுமையாகத் தயாராகவும் உத்வேகத்துடன் இருப்பதைக் கண்டேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/25/murmu-speecch-republic-day-urai-1-2026-01-25-22-37-43.jpg)
இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. விமானப்படையின் போர்த் தயார்நிலையைக் கண்டேன். இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தனித்துவம் வாய்ந்த திறன்களைக் கண்டேன். ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலிலும் நான் பயணித்தேன். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் வலிமையின் அடிப்படையில், மக்கள் நமது பாதுகாப்புத் தயார்நிலையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/25/murmu-speecch-republic-day-urai-2026-01-25-22-37-06.jpg)