தமிழ்நாட்டில் அதிகமான காளைகளும் வாடிவாசல்களும் கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் தான் தொடங்குகிறது. அதே போல இந்த ஆண்டும் எதிர் வரும் ஜனவரி 3ஆம் தேதி தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவின் சார்பில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று (25.12.2025 - வியாழக்கிழமை) பந்தல் கால் நடப்பட்டு ஜல்லிக்கட்டு திடல் ஆயத்தப்பணிகளும் நடக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் வழக்கமாக மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு (2026) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற வேண்டும் என்று அப்பகுதி திமுகவினர் துணை முதலமைச்சருக்கு அழைப்பு கொடுக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். அதனால் பிரமாண்ட ஏற்பாடுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.

Advertisment