கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிகவின் ‘மகளிர் உரிமை மீட்பு மாநாடு 2.0’ இன்று (09-01-25) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தொண்டர்கள் பங்கேற்பதற்காக குடிநீர் வசதி, கழிவறை வசதி, ஆம்புலன்ஸ் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கவுள்ளார். இதனால் இந்த மாநாட்டு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த தேர்தல்களில், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக கூட்டணியில் இருந்து விலகி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

Advertisment

குறிப்பாக, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்பி இடம் ஒதுக்க தேமுதிகவுக்கு அதிமுக சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்காததால் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்து இன்று நடைபெறும் மாநாட்டில் தொண்டர்கள் முன்னிலையில் அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில், கடலூரில் மிகப் பிரமாண்டமாக தேமுதிகவின் மாநாடு நடைபெறவுள்ளது.