கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2-ம் தேதி இரவு 10.30 மணியளவில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த நிலையில், கோவை சம்பவத்தை சுட்டிக் காட்டி பெண்கள் ஏன் தனியே செல்ல வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்டத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரேலமலதா விஜயகாந்த், “விமான நிலையத்துக்கு பின்னால் ஒரு பெண், தனது ஆண் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது ஒரு கூட்டமே அங்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்த கொடுமை நடக்க காரணம் என்ன? இன்றைக்கு, டாஸ்மாக்கும், கள்ளச்சாரயமும், வேலைவாய்ப்பு இல்லாமையும் இருப்பதால் இந்த கொடுமை நடக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்றைக்கு மிகப்பெரிய கேள்விக்குரியாக இருக்கிறது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெண் என்றால் சக்தியின் ரூபம், பெண் என்றால் கற்புக்கு இலக்கணம்.

Advertisment

அதனால், நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும். 24 மணி நேரமும் பெற்றோர் நம்மோடு வர முடியாது. 24 மணி நேரமும் காவல்துறை நமக்கு பாதுகாப்பு தர முடியாது. 24 மணி நேரமும் இங்கு இருக்கிற அரசாங்கம் நமக்கு பாதுகாப்பு தராது. நாளைக்கு பாதித்தால் நம் வாழ்க்கை தான் பாதிக்கும். நானும் ஒரு பெண், எனக்கு அந்த உரிமை இருக்கிறது அதனால் நான் சொல்கிறேன். யாரை நம்பியும் லேட் நைட்டில் தனியாக யாரையும் எங்கேயும் சந்திக்காதீங்க. ஏன் சந்திக்கணும்?. உங்களை நீங்கள் பாதுகாக்கணும். ஏர்போர்ட் பின்னாடி ஏன்மா நீ போற? அதுவும் நைட்டில் எதுக்கு போகணும்?. அதனால், உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தனியாக இரவிலும் செல்கிறாளோ அன்னைக்கு தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றதா வரலாறு என்று காந்தியடிகளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் சொல்லிட்டு தான் இருக்கோம். ஆனாலும் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிக மிக கொடுமையான ஒரு விஷயம். பெண் குழந்தைகளை பெற்றோர்கள் நீங்கள் நல்லா சொல்லி வளங்க. அதையும் மீறி ஒரு இடைஞ்சல் வந்தால், போலீசில் புகார் கொடுங்கள். இன்றைக்கு சட்டம் ரொம்ப வலிமையாக இருக்கு” என்று பேசினார். 

Advertisment