வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்தும் பரபரப்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள்  போன்றவை ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் அதிமுக - பா.ஜ.க கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணியின் பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து வருகின்றன. இது தவிர தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், பா.ஜ.கவில் இருந்து கூட்டணி தொடர்பாக அழைப்பு வரவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்திடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி தொடர்பாக இந்த நிமிடம் வரை யாரும் எங்களை அணுகவும் இல்லை. எங்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எதற்கு வந்திருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது, இதுதான் உண்மை. நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. பிரதமர் 23ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்பதை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். அது கட்சி சார்ந்த கூட்டமா இல்லை கூட்டணி சார்ந்த கூட்டமா என்பது கூட எனக்கு தெரியாது. பா.ஜ.கவில் இருந்து இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை”