Advertisment

"பெயர் மாற்றத்தால் எந்தவொரு புரட்சியும்  வந்துவிடாது” - பிரேமலதா விஜயகாந்த்

WhatsApp Image 2025-12-16 at 3.29.30 PM

நடக்க இருக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக கட்சிப் பணிகள் , தேர்தல்  பணிகள் என மும்மரமாக செயல்பட்டு, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் களப்பணியில் ஈடுபடுத்தி தேர்தலை எதிர்கொள்ளத்  தயாராகி வருகின்ற இந்த சமயத்தில் விஜயகாந்த் அவர்களால் தொடங்கட்டு பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் வழிநடத்தப்பட்டு வரும் தேமுதிகவும் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. 

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து பேசுகையில், "எங்கள் இலக்கு 234 தொகுதிகள்" இருந்த போதிலும் யாருடன் கூட்டணி என்பதையும், யார் யார் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்பதையும் ஆலோசித்து விரைவில்  கட்சித்தலைமை அறிவிக்கும் எனவும் கூறினார்.   பொங்கல் பண்டிகை முடிந்து தங்கள் கட்சியின் நான்காம் கட்ட சுற்றுப்பயணம் ஆரம்பிக்கயிருப்பதாகவும் , அது ஜனவரியில் முடிந்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார்.  

Advertisment


ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, பெயர் மாற்றம் என்பது வெற்று அரசியல் மட்டுமே தானே தவிர, அதனால் எந்த ஒரு புரட்சியும் வந்து விடப்  போவதில்லை. எனவே பெயர் மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று, மேலும் இந்த திட்டம் மகாத்மா காந்தி அவர்களின் பெயரில் இருக்கிறது. அவர் நம் நாட்டின் தேசத் தந்தை, அவர் எந்த ஒரு கட்சிக்கோ  அல்லது ஜாதிக்கோ சொந்தமானவர் இல்லை. நம் நாட்டிற்க்காக உழைத்த அவரின் பெயரிலேயே இருப்பது தான் சரி என்றும், இந்த பெயர் மாற்றும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் பதிலளித்தார்.

dmdk premalatha vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe