தேமுதிக பொதுச் செயலாளரும், மறைந்த விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்தின் தாயார் இன்று காலமானார்.
பிரேமலதா விஜயகாந்தின் தாயாரான அம்சவேணி (83), சென்னை விருகம்பாக்கத்தில் தனது மகன் எல்.கே.சுதிஷ் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அம்சவேணி இன்று (07-10-25) காலமானார். அவரின் உடல், உறவினர்கள், தேமுதிகவினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் அஞ்சலிக்காக எல்.கே.சுதீஷின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனிடையே, காலமான தனது தாயார் உடலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/07/pranjali-2025-10-07-15-24-42.jpg)