'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் பேசுகையில், ''கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம் ஜெயிக்க வேண்டியவர்தான். ஆனால் கடைசி நிமிடத்தில் ஜெயிக்கவில்லை. விஜய பிரபாகர் விருதுநகரில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதை கடைசி நேரத்தில் அவர்கள் இல்லை என்று அறிவிக்கிறார்கள். ஏனென்றால் 39 தொகுதி ஜெயித்து விட்டோம் ஒரு தொகுதி அறிவியுங்கள் என்று மேலிடத்தில் சொல்லி விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் தோற்றதாக அறிவிக்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் இங்கு கடவுள் இருக்கிறார். கேப்டன் இருக்கிறார். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இன்னைக்கு நம்ம கையில் எல்லாம் இருக்கிறது என்று நாம் ஆடக்கூடாது. ஆனால் தலைகீழாக எல்லாம் மாறும். ஆகையால் உறுதியாக சொல்கிறேன் 2026-ல் கேப்டன் ஆசியோடு தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறோமோ அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கேப்டன் தொகுதிகள் அனைத்தையும் நாங்கள் வென்றெடுப்போம்.

Advertisment

விருத்தாசலம் தொகுதி கடலூர் மாவட்டத்தில் கேப்டனுக்கு முதல் தொகுதி. எங்கள் கட்சிக்கு வெற்றியை கொடுத்த தொகுதி. அதனால்தான் கடலூர் மாவட்டத்தில் நாங்கள் ஜனவரி மாதம் மாநாடு நடத்துகிறோம். கழகத்திற்கு முதல் வெற்றியை கொடுத்த விருத்தாசலத்தை தாங்கள் என்றைக்கும் மறக்க மாட்டோம். இந்த ரிஷிவந்தியம் தொகுதி தலைவருக்கு இரண்டாவது வெற்றியை கொடுத்து. அவரை எதிர்க்கட்சித் தலைவராக்கிய தொகுதி. இந்த ரெண்டு தொகுதி உள்ளிட்ட 29 எம்எல்ஏக்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று அனைவருக்கும் மீண்டும் 2026 ல் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.

அதிமுக முன்னாள் எம்பிக்கள் திமுகவில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு;

இது குறித்து இன்னும் எடப்பாடி அவர்களே ஒன்றும் சொல்லவில்லை, குறித்து என்னுடைய கருத்து ஒன்றும் இல்லை, எங்கிருந்து அங்கு செல்வதும் அங்கிருந்து இங்கு செல்வதும் தமிழகத்தில் இன்று ஈசியாக நடக்கிறது. இது தேமுதிகவிலும் நடக்கிறது. நாங்கள் பல வெற்றிகளையும் தோல்விகளையும் துரோகங்களையும் பார்த்து விட்டோம். இதெல்லாம் ஒன் டே நியூஸ்.

ராஜ்யசபா சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்து விட்டது. இன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுகவை விமர்சனம் செய்தீர்கள், ஆகையால் உங்கள் கூட்டணி விஜய்யுடன் இருக்குமா என்கிற கேள்விக்கு;

Advertisment

உடல் நிலை சரியில்லை என்று பார்த்தால் கூட்டணியா என்று கேட்கிறீர்கள். முன்னாள் அமைச்சர் ஓட்டலில் தங்கியதற்கு உடனடியாக அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்கிறீர்கள். ரஜினிகாந்துக்கு ஐம்பதாம் ஆண்டு வாழ்த்து சொல்லி இருக்கிறோம் உடனே கூட்டணி அங்க போகுதா என நீங்கள் அனைவரும் ஒரே நோக்கத்தில் 'கூட்டணியா?' எனப் பார்க்கிறீர்கள்.  அது அப்படி இல்லை கூட்டணிக்கு அப்பாற்பட்டு அரசியல் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பேமிலி பாண்டிங் எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் அண்ணன் ஸ்டாலின் அவர்களை சென்று பார்த்தோம். கே.சி.வீரமணியின் ஓட்டலில் தங்கியதால் அவர் வந்து பார்த்தார். ரஜினிகாந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகி 50 ஆண்டு காலமாகிறது அதனால் அவரை சென்று பார்த்தோம். ஏனென்றால் கேப்டனின் ரஜினிகாந்தின் பெஸ்ட் பிரண்ட்ஸ். சூப்பர் ஸ்டாருக்கு அனைத்து சங்கங்களும் அனைவரும் சேர்ந்து ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். கேப்டன் இருந்தால் நடத்தி இருப்பார் என சொல்லி இருக்கிறோம். பார்ப்போம் என்ன நடக்கிறது'' எனப் பேசினார்.

முன்னதாக விஜயகாந்த் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்டிய மணலூர்பேட்டை தென்பெண்ணை  மேம்பாலத்தில் படுத்து முத்தமிட்டு வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.