Advertisment

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் சிகிச்சை அனுபவங்களைப் பகிர்ந்த கர்ப்பிணி பெண்கள்!

1

திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தில்  பல்வேறு அரசுத் திட்டங்களை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து காரியாபட்டி - முஷ்டக்குறிச்சியில் உள்ள அரசு ஆரம்ப  சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார் அமைச்சர் தங்கம்  தென்னரசு. அப்போது மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து அங்கிருந்த கர்ப்பிணிப்  பெண்களிடம் கேட்டறிந்தார்.  அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த அனுபவங்களை  அமைச்சரிடம் பகிர்ந்துகொண்டனர். மேலும், சுகாதார மையத்தின் தேவைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விசாரித்தார்.

Advertisment

2

அதன்பிறகு  மருந்து இருப்புப் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர்,  மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல்  போதுமான அளவு ஸ்டாக் இருப்பதை உறுதிப்படுத்தினார். மேலும்,  மருத்துவமனையின் சுகாதார நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும்  பார்வையிட்டார். 

govt hospital Thangam Thennarasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe