டாக்டர் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை 1949 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ஆம் நாள் நமது அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொண்டு இயற்றி நமக்கு நாமே வழங்கி வருகிறோம். இந்தியாவை இறையாண்மை கொண்ட சமத்துவம் மிக்க சமயம் சார்பற்ற ஜனநாயக குடியரசாக அமைப்பது என உறுதி கொண்டு உள்ளோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (26.11.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. களியனூரில் அரசியலமைப்பு முகப்புரை ஏந்தி உறுதிமொழி எடுத்து விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.மோகன காந்தி மற்றும் ஆசிரியர் மேனகா, கலியனூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி, கலியனூர் ஊராட்சி செயலாளர் நாகராஜ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது சிறப்பான முறையில் நடைபெற்றது
-