தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக கட்சியின் சார்பில் மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த மாநாடு இந்த மாநாடானது திருச்சி அல்லது மதுரையில் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம் துவக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக விக்கிரவாண்டில் நடந்ததைப் போல மிகப் பெரிய மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் சந்திப்புகளை நடத்தவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. வீட்டில் ஒருவராவது தவெக கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என  அக்கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.