தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றொருபுறம், இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பட்டியடலிடும், 184 சின்னங்களில் தங்களுக்கு தேவையான சின்னங்களை குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து கட்சிகள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம், சட்டமன்றத் தேர்தலுக்கு பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதன்படி, விசில், ஆட்டோ, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்களை தவெக பரிந்துரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் தான், விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெக போட்டியிடும் 234 தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த சின்னம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/22/praveen-chakravarthy-pm-2026-01-22-16-32-14.jpg)
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு தேர்தல் ‘விசில்’ ஒலித்து விட்டது (ஊதப்பட்டு விட்டது). அனைத்து கட்சிகளும் இப்போது தயாராக உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/tvk-vijay-whistle-praveen-chakravarthy-2026-01-22-16-31-28.jpg)