Advertisment

“மகளிர் உரிமைத் தொகை மட்டுமே வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை” - பிரவீன் சக்கரவர்த்தி!

praveen-chakravarthy-mic

திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையைப் மூன்று மாதங்களுக்கு கணக்கில் கொண்டும்,  கோடைக் கால சிறப்பு ஊக்கத் தொகை என மொத்தமாக 5,000 ரூபாயை மகளிரின் வங்கிக்கணக்கில் நேற்று முன்தினம் (13.02.2026)  வரவு வைத்தது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இதனை பல்வேறு கட்சிகள் ஆதரித்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. 

Advertisment

இத்தகைய சூழலில் தான், இது குறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த சந்திப்பில், “மகளிர் உதவித் தொகையைக் கொடுப்பதற்குத் தடை விதிக்க சிலர் சதித் திட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் சதியை முறியடிப்பதற்காக, முதல்வர் இந்த 5,000 ரூபாய் உரிமை தொகை பணம் முன் அறிவிப்பின்றி மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை எனும் இந்த முடிவை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார். 

Advertisment

கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற கருத்துக்களை ராகுல்காந்தி, கார்கே மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் அதற்கு நாம் பதில் சொல்லலாம். மற்றவர்களுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எங்கள் தலைவர் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, இந்த செய்தியைக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது. 

mut-praveen-chakravartrhy

ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன” எனத் தெரிவித்து அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளார். 

Assembly Election 2026 magalir urimai thogai dmk congress Praveen Chakravarty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe