பீகார் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் "ஜன சுராஜ் கட்சி" (மக்கள் நல்லாட்சிக் கட்சி) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில், 243 தொகுதிகளில் 202 இடங்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இந்தியா கூட்டணி 35 இடங்களைக் கைப்பற்றியது.
பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி சொற்ப அளவிலான வாக்குகளையே பெற்றிருந்தன. ஜன சுராஜ் கட்சி ஒரு இடங்களைக் கூட கைப்பற்றாத நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் அரசியலமைப்பு விதிகளை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே பெண்களுக்கான நிதி உதவி (மகிளா ரோஜ்கர் யோஜனா) திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.
இந்த "மகிளா ரோஜ்கர் யோஜனா" திட்டத்தின் கீழ் 25 முதல் 35 லட்சம் வரையிலான பெண்களுக்கு தலா ரூ. 10,000 என வழங்கப்பட்டது. இது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, அரசியலமைப்பின் 324வது பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123வது பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு, பீகாரில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது இன்று (06.02.2026) அன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/prasant-kishore-2026-02-06-08-14-20.jpg)