இரண்டு மாநிலங்களில் வாக்கு இருப்பதாக தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பியதை அடுத்து தவறு இருந்தால் கைது செய்யுங்கள் என பிரஷாந்த் கிஷோர் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
பீகார் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதே வேளையில், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம், பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோரின் பெயர், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. அதாவது, பீகாரின் கர்கஹார் சட்டமன்றத் தொகுதியிலும், மேற்கு வங்கத்தின் பபானிபூர் சட்டமன்றத் தொகுதியிலும் பிரஷாந்த் கிஷோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இரண்டு தனித்தனி மாநில வாக்காளர் பட்டியலில் பிரஷாந்த் கிஷோரின் பெயர் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பிரஷாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிரஷாந்த் கிஷோர் கூறுகையில், “என் பெயர் இரண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தால், பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டபோது என் பெயர் ஏன் நீக்கப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். இடையில், இரண்டு ஆண்டுகள் நான் மேற்கு வங்கத்திற்குச் சென்றேன். அதனால் நான் அங்கு வக்காளராக இருந்தேன். தேர்தல் ஆணையம் ஏன் நோட்டீஸ் அனுப்புகிறது. அது என் தவறு இருந்தால், என்னை கைது செய்யுங்கள்” என சவால் விடுத்துள்ளார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/prasa-2025-10-29-11-05-59.jpg)