ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

eq

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 8.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய், அலாஸ்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்திய நேரப்படி இன்று (30.07.2025) அதிகாலை 06.30 மணியளவில் சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

alert America earthquake Japan Russia tsunami
இதையும் படியுங்கள்
Subscribe