பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மின்டானாவோ என்ற இடத்தில் இந்திய நேரப்படி இன்று (10.10.2025) காலை 7.14 மணிக்கு 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது பூமிக்கு அடியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.