Powerful earthquake hits Pakistan Photograph: (world)
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குத்தார் நகரில் இருந்து வடகிழக்கு பகுதியில் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்து வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து இதுவரை தற்பொழுது எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
Follow Us