தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த ஆண்டுக்கான (2026) பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியீடப்பட்டுள்ள அரசாணையில் 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us