Pongal celebration of Erode Journalists Association Photograph: (erode)
ஈரோடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் விழாவில், 120 ஊடகவியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு பொங்கல் தொகுப்பு, புத்தாடைகளை நலத்திட்ட உதவிகளை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் வழங்கினார்.
ஈரோடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், நகர காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் பேசுகையில், 'பத்திரிகையாளர்கள் சங்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது பெரிதல்ல, அதன் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் தான் முக்கியம். பொங்கல் விழாவையொட்டி பத்திரிகையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
காவல் ஆய்வாளர் அனுராதா பேசுகையில், ''நான் எத்தனையோ மாவட்டங்களில் பணியாற்றி வந்திருக்கிறேன். இதுபோல எந்த மாவட்டங்களிலும் பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி நடத்தியதாக தெரியவில்லை. ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அது தங்களுக்கும், தங்களை நம்பியுள்ள குடும்பத்திற்கும் பாதுகாப்பாக அமையும். இது வேண்டுகோளாக வைக்கிறேன்'' என்றார்.
தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளரான மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பேசுகையில், ''பத்திரிக்கையாளர்கள் பொங்கல் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. பத்திரிக்கையாளர்கள் செய்திகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக சென்று வர வேண்டும். தங்களது உடல் நலனை பேணி பாதுகாக்க வேண்டும்'' என்றார்.
சங்கத்தின் செயலாளர் ஜீவா தங்கவேல் பேசுகையில், "ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட அவர்களின் குடும்பத்தினருக்கு புத்தாடைகள் பொங்கல் பொருட்கள் வழங்குவதை ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் வழக்கமாக செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்காக தொடர்ந்து இந்த செயல்பாடு தொடர்கிறது ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் முன்னெடுக்கும் இந்த செயலை மற்றும் மாவட்டங்களிலும் தற்போது செய்து வருவது ஒரு மகிழ்ச்சியான செய்தி" என்றார்.
இதையடுத்து சிறப்பு அழைப்பாளர்கள், 120 உறுப்பினர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்கான புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை நலத்திட்ட உதவிகளாக வழங்கினர். விழாவிற்க்கான உணவு பொருள் உதவி செய்த நிறுவனங்களுக்கு எங்களது நன்றியை தொறிவித்துகொள்கிறோம். நிகழ்ச்சி நிறைவில் சங்கத்தின் பொருளாளர் ரவி என்ற ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Follow Us