Advertisment

யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்வில் மிகப் பெரிய குறை எது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் ஸ்டார் வீரர்களில் யுவராஜ் சிங்கும் மிக முக்கியமானவர்.சிறந்த ஆல்ரவுண்டராக தனது திறமையை அனைத்து போட்டியிலும் வெளிப்படுத்தியவர்.2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.மேலும் 2011 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்களை குவித்துள்ளார்.

Advertisment

yuvaraj singh

தனது கிரிக்கெட் வாழ்வில் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதோடு டெஸ்ட் போட்டியில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.மேலும் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரராக விளையாடாமல் போனது தான் என் வாழ்வின் மிக பெரிய குறை என்றும் குறிப்பிட்டு பேசினார்.

WorldCup Announcement retirement indian cricket Yuvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe