Advertisment

நூதன முறையில் வாக்கு சேகரித்த இளம் வேட்பாளர் (படங்கள்) 

Advertisment

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிக சார்பில் 107வது வார்டில் போட்டியிடும் பட்டதாரி பெண் வேட்பாளர் கிரண் ஷர்மிலி இன்று மாலை அரும்பாக்கம் ஆர்ச் சிக்னலில் வாகன ஓட்டிகளிடம் முகக் கவசம் மற்றும் தலைக் கவசம் அணிய வலியுறுத்தி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். பின்னர் அருகில் உள்ள அருணாச்சலபுர தெருவில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு இறகு பந்து விளையாடிய இளைஞர்களுடன் விளையாடி வாக்கு சேகரித்தார்.

Chennai local body election
இதையும் படியுங்கள்
Subscribe