
கர்நாடகாவின்மேகதாது அணை கட்டும் முடிவை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களை அண்ணாமலை பேசுகையில், ''காவேரி பிரச்சனையில் நமது அப்பாவி தமிழர்களும் அப்பாவிவிவசாயிகளும் குறிப்பாக பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் தான் இதில் பலிகடாவாக மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த பிரச்சனையை மிக நாகரீகமாக கொண்டுபோகஅறப்போராட்டமாகஉண்ணாவிரத போராட்டத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது.தமிழக மக்களின் நலனுக்காக 365 நாட்களும் போராட நாங்கள் தயார்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் கூறியுள்ளதாவது, ''விவசாயிகளுக்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டுஅடக்க முடியாது. மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பொதுநலனுக்காக போராடும் பாஜகவின் மனவலிமை இந்த பொய் வழக்குகளை தகர்த்துவிடும்'' எனக்கூறியுள்ளார்.
Follow Us