Advertisment

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

publive-image

Advertisment

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி- விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.காதலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையைஏற்படுத்தியது.

campaign sriperumputhur
இதையும் படியுங்கள்
Subscribe