Advertisment

ஆமா, ஆமா, ஆமா... - அந்தக் குழந்தையை ஜெயக்குமாரே ஸ்கூலில் போய் விடட்டும்: வெற்றிவேல் பேட்டி

Vetriivel

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Advertisment

அமைச்சரிடம் உதவிக்கேட்டு போன பெண்ணை கர்ப்பமாக்கிட்டார் என்று குற்றச்சாட்டு எழுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் நீங்கள் புகார் கொடுத்தீர்களா?

Advertisment

பாதிக்கப்பட்ட பெண் துறைமுகம் தொகுதியைச் சேர்ந்தவர். எந்த தொகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் புகார் கொடுக்கலாம். நாங்கள் புகார் கொடுத்தால் கோர்ட் ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. ஆளுநர் இந்த விசயத்தில் தலையிட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும், குடும்பத்தையும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

அமைச்சரிடம் என்ன உதவிக்காக சென்றார். திண்டுக்கல்லில் ரூம் போட்டதாக சொல்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது?.

அந்த பெண்ணும், அவருடைய தாயும் ஒரு பிரச்சனைக்காக ஜெயக்குமார் அலுவலகத்தில் அவரை சந்தித்துள்ளனர். போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட ஒரு விசயம். இரண்டு, மூன்று நாளில் கூப்பிடுவதாக சொல்லி அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை, அவரது தாயார் ஊரில் இல்லாத நேரத்தில் தொடர்புகொண்டு, போலீஸ் அதிகாரியை வரசொல்லியிருக்கிறேன், நீங்களும் வாங்க என்று சொல்லி அழைத்துள்ளார். அந்தப் பெண்ணும் நம்பி சென்றார். சென்றபோது அவரது வீட்டில் யாரும் இல்லை. ஜீஸ் ஒன்றை கொடுத்து குடிக்க சொன்னார். அந்த பெண் மயங்கிவிட, இவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதன்பிறகு திருமணம் செய்வதாக கூறி பலநாள் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை மற்ற கட்சிகள் எதுவும் பேசவில்லையே?

அதற்கு நான் பொறுப்பல்ல. நான் என்ன செய்ய முடியும்?

அந்தப் பெண்ணை ஜெயக்குமார்ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அந்தப் பெண்ணை ஏற்றுக்கொண்டால் தண்டனையில் இருந்து தானாகவே வெளியே வந்துவிடுவார்.

ஜெயக்குமார் அந்தப் பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டால் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

மனைவியாக ஏற்றுக்கொள்ளட்டும். நாமெல்லாம் எங்க போய்விடப்போகிறோம்?. அந்த குழந்தையை அவரே ஸ்கூலில் கொண்டு விடட்டும்.

ஜெயக்குமார் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறாரா? எப்படி என்று சொல்லுங்கள்?

ஆமாம். ஆமாம். ஆமாம்.

எப்படி என்று சொல்லுங்கள்?

எத்தனை தடவை சொல்லுவது.

பலாத்காரம் என்று சொல்கிறீர்களே?

முதல் தடவை அப்படித்தான் நடந்தது. அதன்பிறகு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல நாள் உறவில் இருந்துள்ளார். உண்மை வரும்போது நன்றாக இருக்கும். குரல் தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். குழந்தை தன்னுடையது இல்லை என்று சொல்லட்டும். இவ்வாறு பேட்டி அளித்தார்.

interview jayakumar Vetrivel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe