கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்பு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.

Advertisment

bjp

bjp

இந்நிலையில், எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பாஜக கட்சியின் விதிமுறை படி ஒருவர் இரண்டு பதவியில் இருக்க கூடாது என்பதால் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதால், நளின் குமாரை கர்நாடக மாநில பாஜக தலைவராக அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.