Published on 15/04/2018 | Edited on 15/04/2018

அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானம், பிரதமருக்கு கிடைக்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது தவறான தகவல் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் காமராஜ் கூறினார்.
நாகை மாவட்டம், மன்னார்குடியில் காமராஜ் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னையில், தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அதில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை பிரதமர் அலுவலகத்திற்கு அன்றைய தினமே அனுப்பி வைத்துள்ளோம். அந்த தீர்மானம் பிரதமர் கைக்கு வந்து சேரவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது வியப்பாக உள்ளது. அப்படி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது தவறான செய்தியாகும் என்றார்.