கன்னியாகுமரில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போது அவரிடம், கூட்டணி சம்மந்தமான கேள்விகளுக்கு எல்லோரும் பதில் சொல்வது ஒத்த கருத்துடையவர்கள், ஒத்த கொள்கையுடையவர்கள் ஒன்று சேருவோம் என்கிறார்கள். உங்கள் பார்வையில் ஒத்த கருத்து, ஒத்த கொள்கை என்றால் என்ன?
இதுபோல உலகப்பொய் எதுவும் இருக்க முடியாது. அது யார் சொன்னாலும் சரிதான். ஒத்த கருத்துடையவர்கள், ஒத்த செயல்பாடு உடையவர்கள் ஏன் இரண்டாக பிரிந்து இருக்கிறார்கள். ஒத்த கருத்துடையவர்கள் என்றால் தேர்தல் வரும்போது இரண்டு கட்சிகளாக இல்லை. இரண்டு கட்சிகளும் இணைப்பு நடத்துகிறோம் என்று இணைப்பு நடக்க வேண்டும்.
இது கமல்ஹாசன் வரைக்கும் பொருந்துமா?
யாருடைய அறிக்கையாக இருந்தாலும்.
இவ்வாறு கூறினார்.