Advertisment

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டும் நிறைவு பெற்றதை முன்னிட்டு அவரது பயணம் குறித்த புத்தகம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க விரும்புகிறேன். குடிமக்களின் மனதில் இருக்கும் பதவியில் இருக்கத்தான் எனக்கு ஆசை. நிர்வாகத்திறமை என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் தெலுங்கானாவில் அந்த முதலமைச்சரிடம் பணியாற்றுவது என்பது சவாலான விஷயம். எந்த மாநிலத்தில் எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்ய தயாராக இருக்கிறேன். அப்படிப்பட்ட முதலமைச்சரிடமே பணியாற்றும்போது யாரிடம் பணியாற்றினால் என்ன?" எனப் பேசினார்.