Advertisment

“அருமையான தலைவர் உருவாகிவந்துள்ளார்”- மனம் திறந்த வைகோ!

A wonderful leader has emerged

Advertisment

மதிமுகவின் கட்சி நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது ஒரு அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே தேர்வு செய்யப்பட்டார். இரண்டு பேர் தவிர 104 பேர் தேர்தல் எதற்கு என்று கேட்டார்கள். தேர்தல் நடப்பதை போல வாக்குப் பெட்டி வாங்கி ரகசியமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அதில், 106 பேரில் 104 பேர் துரை வையாபுரி மதிமுகவிற்கு வர வேண்டுமென்று வாக்களித்திருந்தனர். பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம் ஆனால், முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எந்தக் கட்சியிலும் இல்லாததும் மதிமுகவில்தான் நடைபெற்றுள்ளது. தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை வரவேற்று மாவட்டச் செயலாளர்கள் அவருக்கு உயரிய பதவியை அளிக்க வேண்டும் என்று கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் துரை அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதைப் பலமுறை சொல்லிவிட்டேன். அரசியல் ஒரு சூழல், இதில் மாட்டிக்கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும், நிம்மதி இருக்காது என்று அவருக்குப் பலமுறை அறிவுரை கூறினேன்.

துரை வையாபுரிக்கு தகுதி வந்துவிட்டது. மேடையிலும் நன்றாகப் பேசுகிறார், பேட்டியிலும் நன்றாகப் பேசுகிறார். அவருடைய பேட்டியைப் பார்த்துவிட்டு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி, ‘அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார்’ என்று சொன்னார். கட்சியிலிருந்து சிலர் வெளியேயுள்ளார்கள். கட்சிக்கு அது நல்லதாக முடியும். மதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, வலுவாக உள்ளது. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், ‘என்னால் தொடர்ந்து போக முடியாததால் விலகிக்கொள்கிறேன்’என்று கூறியுள்ளாரே தவிர வேறு எதுவும் குற்றச்சாட்டு கூறவில்லை. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்துவது தவறில்லை. அவர்கள் தவறுகள் செய்ததால் ரெய்டு நடக்கிறது”என்றார்.

Duraivaiko mdmk pressmeet vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe