Skip to main content

மகளிர் தினம்; ஆளுநர் தமிழிசை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி வாழ்த்து 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

 Women's Day; Greetings from Governor Tamilisai AAMUK General Secretary TTV

 

சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மகளிர் தினம் குறித்து வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது, “மகளிர் அனைவரும் ஏதோ ஒரு தினத்தில் கொண்டாடிவிட்டு மகளிர் தினத்தை கொண்டாடினேன் என சொல்லாமல் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது மகளிர் கையில் தான் உள்ளது. எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என சில பெண்கள் சொல்கிறார்கள். நமக்கு யாரும் கொடுக்க வேண்டியது இல்லை. நம் சுதந்திரத்தை நாமே எடுத்துக்கொள்ள வேண்டியது தான். பெண்கள் தங்கள் தகுதி, துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். தனது மகிழ்ச்சியை பெருக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக குடும்பத்தை விடுத்து முன்னேற வேண்டும் என்பது இல்லை.  குடும்ப கட்டமைப்புடன் சேர்ந்த வளர்ச்சி தான் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. அதனால் அனைவரும் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். மகளிர் தினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் தினம் தினம் மகளிர் தினமாக கொண்டாடி வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற ஜெயலலிதா மகளிருக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதை இந்நாளில் நினைவு கூர்கிறேன். மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அடித்தளமிட்டவர் ஜெயலலிதா. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கி பெண்களை அதிகாரமிக்கவர்களாக, அரசியல் அறிந்தவர்களாக மாற்றுவதற்கான தொடக்கத்துக்கு அடித்தளமிட்டவரும் அவரே.

 

உலக மகளிர் தினத்தன்றில் மட்டுமின்றி என்றென்றும் பெண்களைப் போற்றினால் மட்டுமே இந்த உலகம் அன்புடனும், அறத்துடன் திகழும் என்பதை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதே நேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Marathon competition to promote fitness among women

 

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் ஐந்து கி.மீ. மாரத்தான் தொடர் ஓட்டம் நேற்று (12.3.2023) நடைபெற்றது. ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் பல்வேறு வயது பிரிவில் 1,900 பெண்கள் கலந்துகொண்டனர். 18 - 25, 26 - 40 மற்றும் 41 வயதுக்கு மேற்பட்ட மூன்று வயது பிரிவுகளில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி, அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மகாராஷ்டிரா வங்கி மேலாளர் ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்தோடு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் டீ-சர்ட், சான்றிதழ்களுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன.