women voting Interestingly

Advertisment

தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு தமிழகம் முழுக்க காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. டெல்டா மாவட்டங்களில் வாக்காளர்கள், குறிப்பாக பெண் வாக்காளர்கள் மிக ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள நகராட்சி இஸ்லாமிய நடுநிலைப்பள்ளியில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதனை தொடர்ந்து வாக்குப் பதிவு துவங்கியதும், வரிசையில் காத்திருந்த ஹஜ் கமிட்டி உறுப்பினர் நஜ்முதீன் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

அதைப்போலவே நகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட நீடூரிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி காலை முதலே தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.