ADVERTISEMENT

அமித்ஷா மீது பெண் எம்.பி பரபரப்பு புகார்! அரசியல் கட்சியினர் அதிர்ச்சி!

01:05 PM Jul 20, 2019 | Anonymous (not verified)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து கொண்டுவருகின்றனர். இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்பியாக ஜார்னா தாஸ் என்ற பெண் எம்.பி உள்ளார். இவர் தன்னுடைய மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் என்ற வகையில் புகார் அளிக்க அமித்ஷாவை சந்தித்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த சந்திப்பின்போது தனது மாநிலத்தில் நடந்த வன்முறைகள் குறித்து உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது அந்த பெண் எம்.பி.யிடம் நீங்கள் பாஜக கட்சிக்கு மாறி விடுங்கள் என்றும் அமித்ஷா கூறியதாகவும், அதனை தான் மறுத்துவிட்டு, நான் திரிபுரா பிரச்சினைகளைப் பற்றிப் பேச உள்துறை அமைச்சர் என்ற முறையில் தான் உங்களை சந்தித்தேன் என்றும், உங்களை பாஜக தலைவராக சந்திக்க வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் எங்கள் கட்சி கொள்கை வேறு உங்கள் கட்சியின் கொள்கை வேறு, உங்களை எதிர்க்கின்ற வரிசையில் முதல் ஆளாக நான் இருப்பேனே தவிர உங்கள் கட்சியில் சேர மாட்டேன் என்று கூறி விட்டதாகவும் ஜார்னா தாஸ் தெரிவித்துள்ளார். அமித்ஷா மீது பெண் எம்பி ஒருவர் குற்றச்சாட்டு கூறியுள்ளது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT