தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால்கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் நின்று சட்டமன்ற உறுப்பினரானமுக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்தநடிகர் கருணாஸ், கடந்த 6-ஆம் தேதிசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்தியதால் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். சீட்டு கேட்கும் அளவிற்கு மானம்கெட்டுப் போகவில்லை.அதிமுக தோல்விக்கு வேலை செய்வோம்'' எனக் கூறியிருந்தார்.
அதையடுத்து அவர் இந்த தேர்தலில்திமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில்,தற்போது அந்த ஆதரவை கருணாஸ்திரும்பப் பெற்றுள்ளார். திமுகவை ஆதரித்து ஆதரவு கடிதம் அளித்திருந்த நிலையில், கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும்பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்காததால்அவர் ஆதரவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.